Shop more pay less !!!

Saturday, May 2, 2020

விவசாய பழமொழிகள் மற்றும் அதன் பொருள் | Vivasaya palamoligal

Agriculture proverbs in tamil with meaning

விவசாய பழமொழிகள்
1) வலுத்தவனுக்கு வாழை இளைச்சனுக்கு எள்ளு

இதன்பெருள்:
வாழை பயிரிட்டால் புயல் காற்று சமயங்களில் அதிக காற்றினால் அது சாய்ந்து விழும் வாய்ப்புள்ளது அதனை தாங்கும் வலிமை வாய்ந்தவர்கள் வாழை பயிரிடலாம் இல்லையேல் எள் பயிரிடலாம்
இதனால் அதிகசேதம் எற்படாது என்பதாகும்

2) முருங்கையை ஒடிச்சு வளர்க்கனும் பிள்ளையை அடிச்சு வளர்க்கனும்

இதன் பொருள்ள:
 கவ்வாத்து செய்யுதல் ஆகும்
இதனால் பயிர் அதிகவிளைச்சல் தரும் என்பதாகும்

3) உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்
இதன் பொருள்:
விவசாயம் செய்யும் போது அதற்கான வேலைகலைச் சரிவர செய்யவேண்டும் பலனை மட்டும் எதிர்பார்ப்பது சரியல்ல என்பதாகும்

4) ஆடிப்பட்டம் தேடி விதை.
இதன் பொருள்:
அதாவது ஆடிமாதம் விதைப்பதற்கு உகந்த மாதம் என்பதாகும்

5) அகல உழுவதைவிட ஆழ உழு. இதன்பொருள்:
 அகல உழுவதால் மண்ணின் சத்துக்கள் மேலே வராது. நிலத்தை ஆழ உழும்பொழுதுதான் அதன் சத்துக்கள் பயிர்களுக்குக் கிட்டும்.மழை நீரும் தேங்கி பயிர் செழிப்புறும்.

6) முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்.
இதன் பொருள்:
 அதாவது நிறைய ஏர்கள் நிலத்தை உழும்போது ஒன்றன்பின் ஒன்றாக உழவேண்டும். வரிசையாக உழ கூடாது என்பதாகும்.


7) எள்ளுக்கு ஏழு உழவு.

 இதன்பொருள் :
ஒவ்வொரு பயிர்களும் ஒவ்வொரு முறையில் பயிரிடப்படும். எள்ளை விதைக்கும் முன் ஏழு முறை பயிரிட வேண்டும் என்பதாகும்.

8) பருவத்தே பயிர் செய்.

 இதன்பொருள்:
 காலத்திற்கேற்ப பருவம் பார்த்து பயிர் செய்ய வேண்டும் என்பதுதான்.

No comments:

100 short proverbs in english

Top 100 easy to remember short proverbs in English 1) The maker of idols doesn't worship them. 2) Iron takes iron from the fur...